ஆக்ஸிஜன் டேங்க் கசிவு, 11 நோயாளிகள் மரணம் மஹாராஷ்டிராவில் நடந்த சோகம்!

ஆக்ஸிஜன் டேங்க் கசிவு, 11 நோயாளிகள் மரணம் மஹாராஷ்டிராவில் நடந்த சோகம்!

நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் மரணமடைவது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்தவகையில் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள ஜாகிர் உசைன் மருத்துவமனையில் ஏராளமானோர் கொரோனா சிகிச்சை பெற்று வந்துள்ளனர். அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆக்ஸிஜன் டேங்கர் லாரியில் திடீர் கசிவு ஏற்பட்டது.

இதனால் டேங்கரில் இருந்த ஆக்ஸிஜன் அனைத்தும் வெளியேறி வீணாகிப்போனது. இதனால் அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் 11 பேர் ஆக்ஸிஜன் இன்றி உயிர் இழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த மருத்துவமனையில் 170 நோயாளிகள் ஆக்ஸிஜன் சிலிண்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது தொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *