உத்தரபிரதேசத்தில் 2 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்து கொலை!! உபியில் தொடரும் கொடுமை!

உத்தரபிரதேசத்தில் 2 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்து கொலை!! உபியில் தொடரும் கொடுமை!

இந்தியாவில் உத்திரபிரதேச மாநிலத்தில் தான் அதிக அளவில் பாலியல் வன்கொடுமைகள் நடக்கின்றன. உத்திரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டம் சர்தானா பகுதியில் டியூசனில் இருந்து வீடு திரும்பிய 10 வயது சிறுமியை 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்தது.

அவர்களிடம் இருந்து தப்பி வந்த பெண்ணை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த பெண் இறந்து விட்டது, போலீசார் வழக்கு பதிவு செய்யாததால் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்ததாக போலீசார் கூறினர் ஆனால் அந்த குற்றவாளிகள் தான் விஷம் கொடுத்துள்ளனர் என்று உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதே போல கபூர் பகுதியில் 10 வயது சிறுமி காணாமல் போனார், காணாமல் போன அந்த சிறுமி நொய்டா மருத்துவமனை அருகே சடலமாக கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவங்களுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *