ஆ ராசாவின் சர்ச்சை பேச்சால் திமுகவிற்கு பின்னடைவு… தமிழகம் முழுவதும் வலுக்கும் எதிர்ப்பு!

ஆ ராசாவின் சர்ச்சை பேச்சால் திமுகவிற்கு பின்னடைவு… தமிழகம் முழுவதும் வலுக்கும் எதிர்ப்பு!

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து பிரட்சாரம் செய்தார் ஆ ராசா, அவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயை பற்றி அவதூராக பேசினார், எடப்பாடி பழனிசாமி தாயின் இறப்பை பற்றியும் தரைகுறைவாக விமர்ச்சித்தார். இது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியது. இதை திமுக தொண்டர்களும் எதிர்த்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ராசா மீது அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.திமுக தலைவர் ஸ்டாலினும் தேர்தல் களத்தில் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறியிருந்தார். இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

முதல்வரின் சொந்த ஊரான எடப்பாடியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதில் ராசாவுக்கு எதிராக முழக்கங்களும், எதிர்ப்புகளும் தெரிவிக்கப்பட்டன. அதேபோல பொள்ளாச்சியிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ராசாவின் இந்த பேச்சு பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியது.

திமுகவின் தொண்டர்கள் பலரும் ராசாவின் இந்த பேச்சால் முகம் சுளித்துள்ளனர். பெண்களை பற்றி இழிவாக பேசிய ராசா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக தொண்டர்கள் தெரிவித்து வருகின்றனர்.இது இந்த தேர்தலில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *