முதல் ஆளாக வாக்குச்சாவடிக்கு வந்தார் நடிகர் அஜித்

முதல் ஆளாக வாக்குச்சாவடிக்கு வந்தார் நடிகர் அஜித்

இன்று தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் வாக்கு பதிவு நடைபெற உள்ளது. சென்னை : திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு, வாக்களிக்க நடிகர் அஜித் மனைவி ஷாலினியுடன் வருகை செய்துள்ளார். இங்கு முதல் ஆளாக நடிகை ஷாலினி வாக்களித்தார் அவரை தொடர்ந்து நடிகர் அஜித்குமார் வாக்களித்தார்.

இவர்கள் இருவரும் வாக்களிக்க வாக்கு தொடங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்னதாகவே வாக்கு சாவடிக்கு வந்தனர். இதை அறிந்த அவருடைய ரசிகர்கள் அவரை சுற்றி புகைப்படம் எடுக்க சூழ்ந்ததால் போலீசார் அவர்களை வெளியேற்றினர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *