ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு நடிகர் சூர்யா செய்த உதவி

ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு நடிகர் சூர்யா செய்த உதவி

கொரோனா ஊரடங்கால் பலரும் தங்களின் வருமானத்தை இழந்து கஷ்டப்பட்டு வரும் சூழ்நிலையில் தன்னுடைய ரசிகர்கள் 250 பேருக்கு நடிகர் சூர்யா சத்தமே இல்லாமல் உதவி செய்துள்ளார். தன்னுடைய ரசிகர்கள் மீது பெரும் பாசம் கொண்ட நடிகர் சூர்யா ஊரடங்கு காலத்தில் உதவி செய்துள்ளார்.

தமிழகம் முழுவதும் உள்ள ரசிகர் மன்ற நிர்வாகிகள் 250 பேருக்கு 2D Entertainment நிறுவனம் சார்பில் 5000 ரூபாய் வங்கிக்கணக்கில் போடப்பட்டுள்ளது. இதை கண்ட சூர்யா ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர் கேட்காமலேயே சூர்யா உதவி செய்தது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *