என் நண்பன் ரொம்ப நல்லவன், கண்ணீர் விட்டு அழுத நடிகர் வடிவேலு

என் நண்பன் ரொம்ப நல்லவன், கண்ணீர் விட்டு அழுத நடிகர் வடிவேலு

நடிகர் விவேக்கின் இறப்பு செய்து உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழ் திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள் ,பொதுமக்கள் என பலரும் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் வைகைப்புயல் வடிவேலு வெளியிட்டுள்ள விடியோவில் விவேகிற்காக கண்ணீர் சிந்தியுள்ளார்.

Vadivelu tearfully mourns the death of his close buddy and rival Vivek -  Tamil News - IndiaGlitz.com

என் நண்பன் விவேக் நல்லவன் என்றும், அவன் எனக்கு ரசிகன் நான் அவனுக்கு ரசிகன் என்றும் கூறியுள்ளார். மனதில் பட்டத்தை என்னைவிட வெளிப்படையாக கூறக்கூடியவர் என்றும் புகழ்ந்துள்ளார். அப்துல்கலாமின் வழியில் ஏராளாமான மரக்கன்றுகளை நட்டு வந்துள்ளார் என்றும் விவேக்கை பற்றி பேசும் போது துக்கம் தொண்டையை அடைக்கிறது என்றும் கூறியுள்ளார்.

தன்னால் நேரில்சென்று அஞ்சலி செலுத்த முடியவில்லை என்றும் தான் தற்போது மதுரையில் தாயாருடன் இருப்பதால் வரமுடியவில்லை என்றும் என்னுடைய நெஞ்சார்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்று விடீயோவில் தெரிவித்துள்ளார். திரைத்துறையை சேர்ந்த ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *