நெஞ்சுவலியால் மயங்கி விழுந்த நடிகர் விவேக், மருத்துவமனையில் எக்மோ சிகிச்சை!

நெஞ்சுவலியால் மயங்கி விழுந்த நடிகர் விவேக், மருத்துவமனையில் எக்மோ சிகிச்சை!

தமிழ் சினிமாவின் புகழ் பெற்ற நகைச்சுவை நடிகர் விவேக், இவர் நகைச்சுவை மட்டுமின்றி கதாநாயகனாகவும் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இன்று வீட்டில் பேசிக்கொண்டிருந்த பொழுது திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Actor Vivek critical after cardiac arrest, hospitalised in Chennai | The  News Minute

அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் இதயத்திற்கு செல்லும் இரத்த குழாயில் அடைப்பு இருப்பதை கண்டறிந்தனர், இதைத்தொடர்ந்து அவருக்கு எக்மோ கருவி உதவியுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விவேக் நலமுடன் இருப்பதாக மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் தகவல் தெரிவித்துள்ளார்.

நடிகர் விவேக் விரைவில் குணமடைய வேண்டும் என துணை முதல்வர் பன்னிர்செல்வம் தெரிவித்திருந்தார், மேலும் அவருடைய ரசிகர்கள் விவேக் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளனர். விவேக் சமீபத்தில் தான் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *