நடிகர் விவேக் காலமானார்! மருத்துவமனையில் உயிர் பிரிந்தது!

நடிகர் விவேக் காலமானார்! மருத்துவமனையில் உயிர் பிரிந்தது!

மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நகைச்சுவை நடிகர் விவேக் இன்று அதிகாலை 4.35மணியளவில் காலமானார் அவருக்கு வயது 59. நேற்று திடீரென மயங்கி கீழே விழுந்த விவேக் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

Image

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இயக்குநர் சிகரம் பாலசந்தரால் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகர் விவேக். நகைச்சுவை மட்டுமின்றி சிந்தனையை தூண்டும் வகையிலும் நடித்து மக்களை கவந்தவர் 2009ம் ஆண்டு நடிகர் விவேக்கிற்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கியது மத்திய அரசு.

நகைச்சுவையோடு சமூக கருத்துக்களையும் தன்னுடைய காமெடியில் கலந்து மக்களுக்கு எடுத்துரைத்தவர். அப்துல்கலாமின் மீது கொண்ட ஈர்ப்பால் தமிழகம் முழுவதும் ஒரு கோடிக்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டியுள்ளார். இளைஞர்களின் மீது அதிக அக்கறை கொண்டவர்.

Image

நடிகர் விவேக் சமீபத்தில் தான் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதற்கும் விவேக்கின் மாரடைப்பிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *