கொரோனா பாதிப்பை திசைதிருப்பவே நடக்கிறதா ஐபிஎல்!! ஆஸ்திரேலிய வீரர் கில்கிறிஸ்ட் கருத்து!!

கொரோனா பாதிப்பை திசைதிருப்பவே நடக்கிறதா ஐபிஎல்!! ஆஸ்திரேலிய வீரர் கில்கிறிஸ்ட் கருத்து!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை அடைந்துவருகிறது. இருப்பினும் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. பார்வையாளர்கள் இன்றி ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கில்கிறிஸ்ட் ட்விட்டரில் பதிவிட்டுள்ள பதிவில் “வாழ்த்துக்கள் இந்தியா, இந்தியாவில் ஒவ்வொரு நாளும் பதிவாகும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பயமுறுத்துகிறது. இந்நிலையிலும் கூட ஐபிஎல் போட்டிகள் தொடர்கிறது இது பொருத்தமற்றதா அல்லது கவனத்தை திசைதிருப்புகிறதா? எதுவாக இருந்தாலும் என்னுடைய பிராத்தனைகள் உங்களுடன் உள்ளது ” என்று பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவிற்கு சிலர் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். சிலர் கொரோனா சமயத்தில் எங்களை மன இறுக்கத்தை போக்க ஐபிஎல் போட்டிகள் உதவுகிறது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *