பெங்களூரு அணியில் இருந்து 2 வீரர்கள் விலகல்..!!

பெங்களூரு அணியில் இருந்து 2 வீரர்கள் விலகல்..!!

ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் இருந்து 2 ஆஸ்திரேலிய வீரர்கள் விளங்கியுள்ளனர். ஆடம் ஜம்பா மற்றும் கேன் ரிச்சர்ட்சன் தனிப்பட்ட காரணங்களுக்காக ஆஸ்திரேலியா திரும்பவுள்ளதாக பெங்களூரு அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பெங்களூரு அணி நடப்பு சீசனில் அபாரமாக விளையாடி வருகிறது. நடைபெற்ற 5 போட்டிகளில் 4-ல் வெற்றி மற்றும் 1 போட்டியில் மட்டுமே தோற்றுள்ளது. இந்த சூழ்நிலையில் தான் அணியில் இருந்து வீரர்கள் வெளியேறியுள்ளன. வீரர்கள் வெளியேற தனிப்பட்ட காரணங்கள் என்று சொல்லப்பட்டாலும் அவர்கள் வெளியேறியதற்கு முக்கிய காரணம் கொரோனா.

இனிவரும் போட்டிகள் மும்பை மற்றும் அஹமதாபாத் மைதானங்களில் நடைபெற உள்ளது. இவ்விரு நகரங்களிலும் கொரோனா தொற்று அதிகமாக இருப்பதால் கொரோனா அச்சம் காரணமாக வீரர்கள் அணியில் இருந்து விலகி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *