சிறையில் சொகுசு வாழ்க்கை,முன்னாள் அமைச்சர் மணிகண்டன் புழல் சிறைக்கு மாற்றம்!

சிறையில் சொகுசு வாழ்க்கை,முன்னாள் அமைச்சர் மணிகண்டன் புழல் சிறைக்கு மாற்றம்!

முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி அளித்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தன்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக நடிகை சாந்தினி போலீசில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து மணிகண்டன் தலைமறைவாக இருந்தார்.

Tamil actor accuses former AIADMK Minister of cheating her after a 5-year  relationship | The News Minute

பெங்களூரில் இருந்த மணிகண்டன் போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். சைதாப்பேட்டை சிறையில் இருந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு சிறையில் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. உயர் அதிகாரிகள் நடத்திய சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அமைச்சர் மணிகண்டன் இன்று புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். மேலும் முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுத்த காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *