எதிர்க்கட்சி தலைவர் யார்? அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் தொடங்கியது..!

எதிர்க்கட்சி தலைவர் யார்? அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் தொடங்கியது..!

எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதை முடிவு செய்யும் அதிமுகவின் எம் .எல்.ஏக்கள் கூட்டம் சென்னையில் தொடங்கியது.கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் பண்ணீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி அணியினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது. இதனால் முடிவு எதுவும் எட்டாத நிலையில் திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Image

இரு அணியினருக்கும் ஒருவரை ஒருவர் தோல்விக்காக குறைகூறி வருவதால் அதிமுகவில் குழப்பம் நீடித்து வருகிறது. இன்று நடைபெற்ற கூட்டத்திலும் தொண்டர்களிடையே வாக்குவாதம் நீடித்து வருகிறது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பண்ணீர்செல்வம் தான் எதிர்க்கட்சி தலைவராக வர வேண்டும் என சில எம்.எல்.ஏக்கள் விரும்புவதாக கூறப்படுகிறது.

எடப்பாடி பழனிச்சாமியின் கூட்டணி முடிவும், வன்னியர் இட ஒதுக்கீடும் தான் தோல்விக்கான முக்கிய காரணம் என பண்ணீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளதால் அதிமுகவில் பதற்றம் நீடித்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *