தாலிபான்கள் நல்ல மனநிலையுடன் வந்திருக்கிறார்கள்…தாலிபான்களை ஆதரிக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்ரிடி!

தாலிபான்கள் நல்ல மனநிலையுடன் வந்திருக்கிறார்கள்…தாலிபான்களை ஆதரிக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்ரிடி!

கடந்த சில நாட்களாகவே ஆப்கானிஸ்தானில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் முழுவதும் வெளியேறிவிட்டன, ஆப்கானிஸ்தானின் அநேக இடங்கள் தாலிபான்களின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது. ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலில் நிலைமை மிக மோசமாகிவிட்டது. அங்குள்ள மக்கள் வெளிநாடுகளுக்கு தப்பித்து செல்ல விமான நிலையத்தில் காத்துக்கிடக்கின்றனர்.

இந்நிலையில் பாக்கிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரிடி அளித்துள்ள பேட்டி ஒன்றில் இந்த முறை தாலிபான்கள் நல்ல மனநிலையில் வந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார். அவர்கள் பெண்களை வேலைக்கு செல்ல அனுமதித்துள்ளனர் என்றும் கூறியுள்ளார்.

தாலிபான்களுக்கு கிரிக்கெட் பிடிக்கும் என்று நம்புகிறேன் என்று அப்ரிடி பேசியிருந்தார். இதற்க்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். ஆப்கானித்தானில் நாளுக்கு நாள் வெடிகுண்டு தாக்குதல் அதிகரித்து வருகிறது ஆனால் நீங்களோ அவர்கள் நல்ல மனநிலையில் வந்துள்ளனர் என்று கூறுகிறார்கள் என்று எப்படி கூறுகிறீர்கள் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Image

இப்படி வெளிப்படையாகவே தாலிபான்களை ஆதரிக்கிறீர்களே நீங்கள் தான் தாலிபான்களுக்கு அடுத்த அதிபர் என்று பலரும் திட்டி தீர்த்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *