நடிகர் அக்சய்குமாருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது!!

நடிகர் அக்சய்குமாருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக அதிகரித்து வருகிறது. நாள் ஒன்றிக்கு 90 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இது இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை உண்டாகி உள்ளதை காட்டுகிறது.

இதை உறுதி செய்யும் விதமாக பாலிவுட் நடிகர்கள் பலருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உண்டாகி வருகிறது. நடிகர் மாதவன், அமீர் கானை தொடர்ந்து தற்போது அக்சய் குமாருக்கும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று ட்விட்டரில் பதிவிட்டுள்ள அக்சய் குமார் தனக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதை தொடர்ந்து வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டதாகவும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்துகொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *