ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்பது தமிழக அரசின் நோக்கமல்ல- எடப்பாடி பழனிசாமி

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்பது தமிழக அரசின் நோக்கமல்ல- எடப்பாடி பழனிசாமி

நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. அதேசமயம் நாட்டில் ஆக்ஸிஜன் பயன்பாடும் அதிகரித்துள்ளது. டெல்லி போன்ற மாநிலங்களில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது, ஏராளமான கொரோனா நோயாளிகள் oxygen இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்த சமயத்தில் தான் ஸ்டெர்லைட் நிர்வாகம் இலவசமாக oxygen தயாரித்து வழங்க தயார் என வேதாந்தா நிறுவனம் அறிவித்திருந்தது. ஸ்டெர்லைட் அலையை அனுமதிப்பது குறித்த வழக்கு நடந்து வரும் நிலையில் சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அணைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.

Image

இதில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது அரசின் நோக்கம் அல்ல என்றும், ஸ்டெர்லைட் ஆலையை மூடியதே தமிழக அரசு தான் என்றும் நாட்டில் நிலவும் oxygen தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு oxygen தயாரிக்க மட்டும் 4 மாதங்கள் அனுமதி தரலாம் என்று தெரிவித்தார்.

இதில் பங்கேற்ற அணைத்து கட்சியினரும் oxygen தயாரிக்க மட்டும் அனுமதிக்கலாம் என்று தெரிவித்து உள்ளனர். ஆனால் மத்திய அரசு வேதாந்தா நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்படுவதை அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்தனர்.

Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *