தமிழக பாஜக தலைவராக பதவியேற்கிறார் அண்ணாமலை!

தமிழக பாஜக தலைவராக பதவியேற்கிறார் அண்ணாமலை!

மோடி அரசின் மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தை தொடர்ந்து தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகனுக்கு மத்திய அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து யார் அடுத்த தமிழக பாஜகவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற கேள்வி எழுந்தது.

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலையை தமிழக பாஜகவின் தலைவராக ஜே.பி நட்டா அறிவித்தார். இளம் வயது நபரை தமிழக பாஜகவின் தலைவராக அறிவித்துள்ளது பாஜக தலைமை. இனிவரும் காலங்களில் அண்ணாமலையின் செயல்பாடுகள் எப்படி இருக்கும், தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சியில் அண்ணாமலை எப்படி செயல்பட போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை இன்று பதவியேற்றுக்கொள்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *