தப்பித்து செல்லும் போது பணமூட்டைகளை எடுத்து சென்றேனா? ஆப்கான் அதிபர் அஷ்ரப் கனி விளக்கம்!

தப்பித்து செல்லும் போது பணமூட்டைகளை எடுத்து சென்றேனா? ஆப்கான் அதிபர் அஷ்ரப் கனி விளக்கம்!

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியது முதல் நாள்தோறும் ஆப்கானிஸ்தானில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி வருகிறது. ஆப்கான் தலைநகர் காபூலை தாலிபான்கள் கைப்பற்றிய பிறகு அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி அங்கிருந்து தப்பித்து ஐக்கிய அமீரகம் தப்பித்து சென்றுவிட்டார். அவர் தப்பித்து செல்லும் போது 3 கார்கள் நிறைய பணம் மற்றும் 1 ஹெலிகாப்டர் பிடிக்கும் அளவிற்கு பணத்தை எடுத்துக்கொண்டு சென்றதாக தகவல்கள் வெளிவந்தன.

நேற்று சமூக வலைத்தளம் மூலம் ஆப்கானிஸ்தான் மக்களிடம் அவர் பேசியிருந்தார், அதில் ஆப்கானிஸ்தானில் ரத்தம் சிந்தக்கூடாது என்ற காரணத்திற்காகவே அங்கிருந்து வந்ததாகவும், விரைவில் நாடு திரும்ப பரிசீலித்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும் நாட்டை விட்டு வெளியேறும் போது பணத்தை எடுத்துக்கொண்டு சென்றதாக பரவும் தகவல் உண்மையல்ல.

நான் தப்பித்து சென்ற நேரம் காலணிகளை மாட்ட கூட நேரமில்லை, இந்த சூழ்நிலையிலும் நான் எப்படி பணத்தை எடுத்துக்கொண்டு செல்ல முடியும்? என்று பதிலளித்துள்ளார் அஷ்ரப் கனி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *