நடப்பு ஐபிஎல் சீசனில் இருந்து விலகினார் ரவிச்சந்திரன் அஸ்வின்!!

நடப்பு ஐபிஎல் சீசனில் இருந்து விலகினார் ரவிச்சந்திரன் அஸ்வின்!!

நடந்து வரும் இந்தாண்டிற்கான ஐபிஎல் சீசனில் இருந்து விலகுவதாக தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். நேற்று டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையான போட்டி சென்னையில் நடைபெற்றது. இந்த போட்டியில் சூப்பர் ஓவரில் டெல்லி அணி வெற்றி பெற்றது.

வெற்றிக்குப்பின் ட்விட்டரில் பதிவிட்டுள்ள அஸ்வின் “நான் நடப்பு ஐபிஎல் சீசனில் இருந்து விலக உள்ளேன், என்னுடைய குடும்பம் மற்றும் உறவினர்கள் கொரோனாவிற்கு எதிராக போராடி வருகின்றனர். இந்த இக்கட்டான சூழலில் நான் அவர்களுடன் இருக்க விரும்புகிறேன். ஒருவேளை இவை அனைத்தும் சரியாக செல்லும் பட்சத்தில் நான் மீண்டும் போட்டிகளில் பங்கேற்பேன் ” என்று தெரிவித்துள்ளார்.

இதற்க்கு டெல்லி அணி நிர்வாகமும் ஆதரவு தெரிவித்துள்ளது. அஸ்வின் டெல்லி அணிக்காக கடந்த ஆண்டு முக்கிய பங்காற்றியவர் , தற்போதும் சிறப்பாக விளையாடி வருகிறார். டெல்லி அணியில் அக்சர் படேல், அமித் மிஸ்ரா போன்ற சுழற்பந்து வீச்சாளர்கள் இருக்கின்றனர். இதனால் டெல்லி அணி நிர்வாகம் அஷ்வினுக்கு ஆதரவு அளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *