விராட் கோலியை பின்னுக்கு தள்ளிய பாபர்அசாம்!!

விராட் கோலியை பின்னுக்கு தள்ளிய பாபர்அசாம்!!

ஒரு நாள் கிரிக்கெட் போட்டியை பொறுத்தவரை விராட்கோலி 2017 முதல் தொடர்ந்து 1258 நாட்கள் முதல் இடத்தில நீடித்து வந்தார். ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் உலகின் தலைசிறந்த வீரர் என்று அனைவராலும் பாராட்டப்படும் கோலியின் சாதனையை பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர்அசாம் தகர்த்துளார். விராட் கோலியை பின்னுக்கு தள்ளி முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார் பாபர்.

Babar Azam Dethrones Virat Kohli After Over 3-Year-Long Reign On Top Of ODI  Rankings | Cricket News

நேற்று ஐசிசி வெளியிட்டுள்ள ஒரு நாள் போட்டிக்கான தரவரிசை பட்டியலில் 865 புள்ளிகளுடன் பாபர் முதல் இடத்திலும் , 852 புள்ளிகளுடன் விராட் இரண்டாம் இடத்திலும் , 825 புள்ளிகளுடன் ரோஹித் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

சமீபத்தில் நடந்து வரும் தென்னாப்ரிக்காவிற்கு எதிரான ஒரு நாள் போட்டியில் பாபர் அசாம் சிறப்பாக விளையாடியதால் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஒரு நாள் போட்டியில் முதல் இடத்திற்கு முன்னேற வேண்டும் என்பது பாபரின் கனவு அவரின் கடுமையான உழைப்பால் முதல் இடத்திற்கு முன்னேறியுளார்.

இருப்பினும் விராட்கோலி மீண்டும் முதல் இடத்திற்கு முன்னேற ஆர்வமாக இருப்பார் இன்னும் சில நாட்களிலே கோலி மீண்டும் முதல் இடத்திற்கு முன்னேறுவார் என்று அவருடை ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *