யோவ் யாருயா நீ..உனக்கு எங்க ஊரு பவர் ஸ்டார் பரவலா..வாயை கொடுத்து வாங்கிக்கொண்ட பாலகிருஷ்ணா..!

யோவ் யாருயா நீ..உனக்கு எங்க ஊரு பவர் ஸ்டார் பரவலா..வாயை கொடுத்து வாங்கிக்கொண்ட பாலகிருஷ்ணா..!

தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக கூறப்படும் நடிகர் பாலகிருஷ்ணா சமீபத்திய தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் எங்கள் குடும்பம் தெலுங்கு சினிமாவிற்கு செய்ததற்கு எந்த விருதும் ஈடாகாது, A.R ரஹ்மான் ஏதோ ஆஸ்கார் விருது வாங்கி இருக்கிறார் என்று சொல்கிறார்கள் ஆனால் எனக்கு அவர் யார் என்றே தெரியாது. அவரெல்லாம் கால் தூசிக்கு சமாதானம் என்று வாய்க்கு வந்தததை உளறியுளார் பாலகிருஷ்ணா.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானதை தொடர்ந்து பலரும் இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஒரு முன்னணி நடிகராக இருந்து கொண்டு இவ்வாறு பேசுவது ஏற்றுக்கொள்ள கூடிய விஷயம் அல்ல என்று கூறுகின்றனர். ரஹ்மான் என்றால் ஆஸ்கார் விருது வாங்கியது நினைவிற்கு வருவது போல பாலகிருஷ்ணா என்றால் மலைமீது ஏறி முயலை காப்பாற்றுவது, பறந்தே பாகிஸ்தான் போவது இதுதான் நியாபகம் வருகிறது என்று கலாய்த்து வருகின்றனர்.

இன்னும் ஒருசிலர் உனக்கு எங்க ஊரு பவர் ஸ்டார் பரவால்ல என்று கூறி மீம்ஸ் பதிவிட்டு வருகின்றனர். மேலும் ட்விட்டரில் who is balakrishna என்ற ஹாஷ்டாக் ட்ரெண்டிங்கில் உள்ளது.

Follow us on twitter

Image

Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *