தாலிபான்களை அங்கீகரிக்க மாட்டோம்-கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அதிரடி அறிவிப்பு!

தாலிபான்களை அங்கீகரிக்க மாட்டோம்-கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அதிரடி அறிவிப்பு!

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் ஆக்கிரமித்தது முதல் உலகம் முழுவதும் பரபரப்பாக பார்க்கப்பட்டு வருகிறது. ஆப்கானிஸ்தானில் உள்ள முக்கிய நகரங்களை தாலிபான்கள் தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது. அந்நாட்டு அதிபர் அங்கிருந்து தப்பித்து சென்றுவிட்டார்.

புதிதாக அமையவுள்ள தாலிபான் அரசுடன் நட்புறவுடன் செயல்பட தயார் என சீனா அறிவித்திருந்தது. பாகிஸ்தானும் தாலிபான்களுக்கு ஆதரவு அளித்துள்ளது . இந்நிலையில் கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைத்துள்ள தாலிபான்களை ஆப்கான் அரசாக அங்கிகரிக்க மாட்டோம் என தெரிவித்துளார்.

கனடாவின் இந்த அறிவிப்பு முக்கிய கவனம் பெற்றுள்ளது. ஏற்கனவே அமெரிக்கா ஆப்கானிஸ்தானுக்கு இனிமேல் நிதியுதவி வழங்காது என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து செய்திகளை அறிந்திட எங்களின் ட்விட்டர் பக்கத்தை Follow செய்யுங்கள் https://twitter.com/TamildiaryIn

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *