களமிறங்கிய கேப்டன் விஜயகாந்த்…சூடுபிடிக்கும் தமிழக அரசியல் களம்!!

களமிறங்கிய கேப்டன் விஜயகாந்த்…சூடுபிடிக்கும் தமிழக அரசியல் களம்!!

தமிழகத்தில் அடுத்த மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்காக முக்கிய கட்சித் தலைவர்கள் அனைவரும் தங்களின் வேட்பாளர்களை ஆதரித்து பிரட்சாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தேமுதிக அதிமுக கூட்டணியில் இருந்து விலகி அமமுக வுடன் கூட்டணி அமைத்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக அரசியல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்தார் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த். இதற்க்கு காரணம் விஜயகாந்த் அறுவைசிகிச்சை செய்து கொண்டதும் அவரின் உடல்நலனை கருத்தில் கொண்டும் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் இருந்தார்.

பரபரப்பான இந்த தேர்தல் சூழ்நிலையில் தேமுதிக, அமமுக, SDPI, AIMIM கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கும்மிடிப்பூண்டியில் பிரச்சாரத்தைத் தொடங்கினார். திறந்த வாகனத்தில் கைகூப்பி வாக்கு சேகரிக்க ஆரம்பித்தார்.

இதை கண்ட தேமுதிக தொண்டர்கள் சிங்கம் களம் இறங்கிவிட்டது என கொண்டாடி வருகின்றனர். விஜயகாந்த் இல்லாமல் தேமுதிக மட்டுமில்லாமல் தமிழ்நாடு அரசியல் களமும் சற்று தொய்வாகவே இருந்தது தற்போதுதான் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *