அமைச்சர் வேலுமணி மீது வழக்குப்பதிவு!

அமைச்சர் வேலுமணி மீது வழக்குப்பதிவு!

அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது குனியமுத்தூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இதில் தொண்டாமுத்தூர் தொகுதியில் அமைச்சர் வேலுமணி அவர்கள் அதிமுக சார்பில் போட்டியிடுகிறார். தேர்தல் நாளான நேற்று அதிமுக கட்சி துண்டு அணிந்துகொண்டு வாக்கு சாவடிக்கு வந்ததாகவும்

S. P. Velumani - Wikipedia

மேலும் கட்சி கொடி பொருத்திய காரில் வாக்கு சாவடிக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது. இது தேர்தல் விதிகளுக்கு எதிரானது என கூறி அவர் மீது குனியமுத்தூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதே போன்று நேற்று வானதி ஸ்ரீனிவாசன் தாமரை சின்னத்தை அணிந்து கொண்டு வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தார், அதே போல கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் மீதும் அனுமதி இல்லாமல் வாக்குச்சாவடிக்கு சென்றதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது.