சென்னையில் நாளை முதல் கூடுதலாக 400 பேருந்துகள் இயக்கம்!

சென்னையில் நாளை முதல் கூடுதலாக 400 பேருந்துகள் இயக்கம்!

கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு நாளை முதல் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்படி பேருந்துகளில் பயணிகள் அமர்ந்தபடி பயணம் செய்ய மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் அதிக அளவில் பயணிகளை ஏற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த சிக்கலை சமாளிக்க நாளை முதல் சென்னையில் கூடுதலாக 400 பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளது போக்குவரத்து கழகம். முகக்கவசம் அணிவதை கட்டாயப்படுத்த தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. 45 வயதிற்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் நாள் ஒன்றுக்கு 1500 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருவதால் தமிழக அரசு தீவிர கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த வருடம் கொரோனா பரவலின் வேகம் அதிகமாக உள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *