பாதி எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட இஸ்ரோ விஞ்ஞானி மகன்-சென்னை ஐஐடியில் அதிர்ச்சி சம்பவம்!

பாதி எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட இஸ்ரோ விஞ்ஞானி மகன்-சென்னை ஐஐடியில் அதிர்ச்சி சம்பவம்!

நேற்று இரவு சென்னை ஐஐடி வளாகத்தில் பாதி எரிந்த நிலையில் சடலம் ஒன்று இருப்பதை கண்ட சக மாணவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். ஐஐடி வளாகத்திற்கு சென்ற போலீசார் பாதி எரிந்த நிலையில் இருந்த சடலத்தை கைப்பற்றினர். பின்னர் மேற்கொண்ட விசாரணையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட நபர் கேரள மாநிலம் எர்னாகுளத்தை சேர்ந்த உன்னிகிருஷ்ணன் என்பது தெரியவந்தது.

இவர் இஸ்ரோவில் பணிபுரியும் ரகு என்பவரின் மகன் என்பதும் தெரியவந்தது. இவர் சென்னை வேளச்சேரியில் தங்கி இருந்து ஐஐடி மாணவர்களுக்கு ப்ராஜெக்ட் வேலைகளை செய்து கொடுத்து வந்துள்ளார். அவர் தங்கியிருந்த அறைக்கு சென்ற போலீசார் அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றினர்.

அதில் நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என எனக்கே தெரியவில்லை மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறேன் என்னுடைய சாவுக்கு யாரும் காரணம் இல்லை என ஆங்கிலத்தில் எழுதி வைத்துள்ளார். மேலும் இவர் கேரளாவில் B.Tech படித்து முடித்துவிட்டு ஐஐடியில் ப்ராஜெக்ட் அஸோஸியேட் ஆக பணியாற்றி இருப்பதும் தெரியவந்தது.

Image

சிறிய கேனில் பெட்ரோல் எடுத்து சென்று தன் மீது ஊற்றி கொண்டு தீயிட்டு தற்கொலை செய்து கொண்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இது தற்கொலையா இல்லை கொலையா என்பது விசாரணைக்கு பிறகே தெரியவரும். ஐஐடியில் ஏற்கனவே சாதிய புகார்கள் இருக்கிறது என புகார்கள் வந்த நிலையில் தற்போது இந்த சம்பவம் மேலும் பரபரப்பை அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *