இந்தியாவை கேலிசெய்த சீனா ராக்கெட்..கட்டுப்பாட்டை இழந்து பூமியில் விழுகிறது!!

இந்தியாவை கேலிசெய்த சீனா ராக்கெட்..கட்டுப்பாட்டை இழந்து பூமியில் விழுகிறது!!

சீனா விண்வெளியில் விண்வெளி மையத்தை அமைக்கும் முயற்சியின் முதல் படியாக 21 டன் எடை கண்ட பகுதியை கடந்த வாரம் விண்வெளிக்கு அனுப்பியது. சீனாவின் சக்தி வாய்ந்த ராக்கெட்டாக கருதப்படும் LONG MARCH-5B என்ற ராக்கெட் மூலம் கடந்த வாரம் விண்வெளிக்கு அனுப்பியது.

விண்வெளிக்கு அனுப்புவதற்கு முன்பாக கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்புடைய சமூக வலைத்தள பக்கம் இந்தியாவின் கொரோனா பாதிப்பையும் சீனா அனுப்பவுள்ள ராக்கெட்டையும் தொடர்புபடுத்தி போட்டோ ஒன்றை வெளியிட்டது. இதை பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

21 டன் எடை கொண்ட ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்ட 1 மணி நேரத்திலேயே கட்டுப்பாட்டை இழந்ததாகவும், எந்நேரமும் பூமியில் விழும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித்தது. தற்போது பூமிக்கு மேல் 300 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இந்த ராக்கெட் பூமியின் வளிமண்டலத்தின் மீது மோதும் பொழுது ராக்கெட்டின் பாகங்கள் எரிந்து சிதறும் என்றும் ஒரு சில பாகங்கள் பூமியின் மீது விழும் அபாயம் இருப்பதாக அமெரிக்காவை சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ராக்கெட்டின் வேகத்தை கணக்கிடும் பொழுது எப்போது பூமியின் வளிமண்டலத்தில் நுழையும் என்பதை கணிக்க முடியவில்லை என்றும் இருப்பினும் 8 ஆம் தேதி பூமியின் வளிமண்டலத்தில் வரலாம் என கணித்துள்ளனர். இதன் ஒரு சில பாகங்கள் அமெரிக்காவிற்கும் நியூஸிலாந்துக்கும் இடையே விழலாம் என கணித்துள்ளனர்.

கடந்த ஆண்டு கொரோனாவால் உலகிற்கு அட்சத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது ராக்கெட் ஒன்றால் உலகிற்கு மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது சீனா. சீனாவின் ராக்கெட் பூமியின் மீது விழுவது இது ஒன்றும் முதல்முறை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *