ரொனால்டோ செய்த ஒற்றை செயல்..4 பில்லியன் டாலரை இழந்த Coca-Cola நிறுவனம்!

ரொனால்டோ செய்த ஒற்றை செயல்..4 பில்லியன் டாலரை இழந்த Coca-Cola நிறுவனம்!

யூரோ கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகிறது. முதல் போட்டி நடைபெறுவதற்கு முன் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போர்சுக்கல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ செய்தியாளர் சந்திப்பில் மேசையின் மீது வைக்கப்பட்டிருந்த இரண்டு கோகோ-கோலா பாட்டில்களை நகர்த்திவிட்டு அதற்க்கு பதிலாக தண்ணீர் பாட்டிலை வைத்தார்.

மேலும் அவர் தண்ணீரை குடியுங்கள் என்று சொல்வது போல தண்ணீர் பாட்டிலை தூக்கி காட்டினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இந்த விடீயோவின் விளைவால் ஐரோப்பிய சந்தைகளில் கோகோ கோலாவின் பங்குகள் 4 பில்லியன் அமெரிக்க டாலர்களை இழந்தது.

Cristiano Ronaldo recovers from virus and back for Juventus - The Hindu

ரொனால்டோ இவ்வாறு செய்தது முதன் முறை அல்ல, அவர் இதுபோன்ற பானங்களை விரும்புவதில்லை என்றாலும் யூரோ கோப்பையின் ஸ்பான்சர்களில் ஒன்றான கோகோ கோலவிற்கே எதிராக நடந்து கொண்டுள்ளார். இதுவரை அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ரொனால்டோ என்னும் ஒற்றை ஆல் கோகோ கோலா என்னும் கார்ப்பரேட் நிறுவனத்திற்கே பயம் காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *