இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையில் 594 மருத்துவர்கள் உயிரிழப்பு அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையில் 594 மருத்துவர்கள் உயிரிழப்பு அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையில் 594 மருத்துவர்கள் உயிர் இழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது. இந்தியாவிலேயே அதிக அளவில் டெல்லியில் 107 மருத்துவர்கள் உயிர் இழந்துள்ளனர். அதற்க்கு அடுத்த படியாக பீகாரில் 96 மருத்துவர்கள் உத்திர பிரதேசத்தில் 67 மருத்துவர்கள் உயிர் இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தானில் 43 மருத்துவர்க்ளும் ஜார்கண்ட் மாநிலத்தில் 39 மருத்துவர்களும் உயிர் இழந்துள்ளனர். தமிழகத்தில் 21 மருத்துவர்களும் புதுச்சேரியில் ஒரு மருத்துவரும் உயிர் இழந்துள்ளனர். கொரோனாவால் அதிக அளவில் மருத்துவர்கள் உயிர் இழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *