தமிழகத்தில் 17000 க்கும் கீழ் குறைந்தது கொரோனா தொற்று!

தமிழகத்தில் 17000 க்கும் கீழ் குறைந்தது கொரோனா தொற்று!

தமிழகத்தில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16813 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது, மேலும் 358 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிர் இழந்துள்ளனர்.

ஒரே நாளில் 32049 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் போடப்பட்டுள்ள ஊரடங்கு நல்ல பலனை அளித்துள்ளதாக முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கொரோனா தட்டுப்படும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 1 வாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *