இந்தியாவில் ஒரே நாளில் 56211 பேருக்கு கொரோனா..!!

இந்தியாவில் ஒரே நாளில் 56211 பேருக்கு கொரோனா..!!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் பபுதிதாக 56211 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,20,95,855 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று ஒரே நாளில் 37,028 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர், இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,13,93,021 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 271 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். கொரோனாவால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,62,114 ஆக உள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 5,40,720 ஆக உள்ளது.

இதுவரை 6,11,13,354 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுகொண்டுள்ளனர். இந்தியாவின் முக்கிய நகரங்களில் கொரோனா வைரஸ் வேகமாக அதிகரித்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *