பயம் காட்டிய கொல்கத்தா, கடைசி ஓவரில் சென்னை அணி த்ரில் வெற்றி!

பயம் காட்டிய கொல்கத்தா, கடைசி ஓவரில் சென்னை அணி த்ரில் வெற்றி!

நேற்று இரவு மும்பையில் நடைபெற்ற போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின, டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச முடிவு செய்தது. ருதுராஜ் மற்றும் டுப்ளிஸிஸ் சிறப்பான தொடக்கத்தை சென்னை அணிக்காக கொடுத்தனர். ருத்துராஜ் 42 பந்துகளில் 62 ரன்களை விளாசினார். மறுமுனையில் டுப்ளிஸிஸ் அதிரடியாக விளையாடி வந்தார்.

Over a period of time, MS Dhoni has played a key role in mentoring the young batsman

பின்னர் வந்த மெய்ன் அலி 12 பந்துகளில் 25 ரன்களை எடுத்து அவுட் ஆனார். பிறகு களம் இறங்கிய தோனி 8 பந்துகளில் 17 ரன்களை எடுத்தார் இதில் 2 பவுண்டரி மற்றும் 1 சிக்சரும் அடக்கம். டுப்ளிஸிஸ் 60 பந்துகளில் 95 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தார். இதனால் சென்னை அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்களை எடுத்து.

221 என்ற கடினமான இழக்கை எடுக்க முதல் ஓவரிலேயே கில் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். இதனையடுத்து திரிபாதி, மார்கன்,ராணா, நரேன் ஆகிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். இதையடுத்து வந்த ரஸ்ஸல் மற்றும் தினேஷ் கார்த்திக் கொல்கத்தா அணிக்கு நம்பிக்கை அளித்தனர்

.

அதிரடியாக விளையாடிய ரஸ்ஸல் 21 பந்துகளில் அரைசதம் விளாசினார்.அவர் 54 ரன்களுக்கு சாம் கர்ரன் பந்தில் அவுட் ஆகினார். பின்னர் வந்த கம்மின்ஸ் யாரும் எதிர்பார்க்காத வகையில் சிறப்பாக விளையாடினர். தினேஷ் கார்த்திக் 40 ரன்களில் அவுட் ஆகி வெளியேற போட்டி முடிந்து விட்டது என சென்னை ரசிகர்கள் சந்தோஷத்தில் இருந்தனர்.

சாம் கர்ரன் வீசிய ஓவரில் கம்மின்ஸ் 30 ரன்களை எடுத்தார். இதனால் ஆட்டம் கொல்கத்தா பக்கம் திரும்பியது இருப்பினும் அவருக்கு மற்ற வீரர்கள் ஒத்துழைக்காததால் தடுமாறியது கொல்கத்தா. கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கிருஷ்ணா ரன் அவுட் ஆக சென்னை அணி 18 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

புள்ளி பட்டியலில் சென்னை அணி முதல் இடத்திற்கு முன்னேறியது. சிறப்பாக விளையாடி 95 ரன் எடுத்த டுப்ளசிஸ் ஆட்டநாயகனா அறிவிக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *