டெல்லியில் ஒரு வாரம் முழு ஊரடங்கு அறிவிப்பு

டெல்லியில் ஒரு வாரம் முழு ஊரடங்கு அறிவிப்பு

டெல்லியில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் இன்று இரவு முதல் 26 ஆம் தேதி வரை ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கை அறிவித்துள்ளது டெல்லி அரசு. சற்று நேரத்திற்கு முன் அம்மாநில ஆளுநருடன் ஆலோசனை நடத்திய டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் இந்த முடிவை அறிவித்துள்ளார்.

Lockdown in Delhi? CM Arvind Kejriwal likely to make BIG announcement today

டெல்லியில் நாள் ஒன்றுக்கு 25ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதனால் அம்மாநிலத்தின் சுகாதார கட்டமைப்பு பாதிக்கப்படும் என்பதால் இந்த அவசர முடிவை எடுத்துள்ளது டெல்லி அரசு.

மேலும் டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளின் கூட்டம் அலைமோதுகிறது. மருத்துவ சுமையை குறைக்கும் நோக்கிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் அத்தியாவசிய பணிகள் தவிர்த்து வெளியே வர வேண்டாம் என கேட்டுக்கொள்ளபட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *