நாய்க்குட்டியை பலூனில் கட்டி பறக்கவிட்ட யூடூப்பர் கைது!

நாய்க்குட்டியை பலூனில் கட்டி பறக்கவிட்ட யூடூப்பர் கைது!

டெல்லி: டெல்லியை சேர்ந்த பிரபல youtuber “gauravzone” என்ற சேனலை நடத்தி வருகிறார். இவர் 40 லட்சத்திற்கும் அதிகமான subscriber-களை பெற்றுள்ளார். இவர் பதிவிடும் அணைத்து விடீயோக்களும் லட்சக்கணக்கானோர் பார்க்கின்றனர். இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார், அதில் ஹீலியம் பலூன்களை நாய்க்குட்டி உடன் இணைத்து பறக்கவிட்டு அதை விடியோவாக பதிவிட்டுள்ளார்.

நாய்க்குட்டியை பலூனில் கட்டி பறக்கவிடும் காட்சி

இந்த வீடியோ வெளியாகி பலரது எதிர்ப்பையும் பெற்றது. இந்த வீடியோ தொடர்பாக விலங்கு நல அமைப்பாளர்கள் வழக்குப்பதிவு செய்தனர்.இது குறித்து அவர் தெரிவித்துள்ள பதிவில் “சரியான பாதுகாப்புடன் தான் நாய்க்குட்டியை பறக்கவிட்டேன், யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால் மன்னித்து கொள்ளுங்கள் ” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் டெல்லி சவுத் போலீசாரால் இன்று காலை கைது செய்யப்பட்டு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டார். வீடியோ ட்ரெண்டிங்கில் வரவேண்டும் என்பதற்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வசமாக மாட்டிக்கொள்கின்றனர் இன்றைய ட்ரெண்டிங் youtubers.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *