அம்மா உணவகத்தை சூறையாடிய இருவர் கைது!

அம்மா உணவகத்தை சூறையாடிய இருவர் கைது!

சென்னை முகப்பேரில் உள்ள அம்மா உணவகத்தில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் படத்தை அகற்றகோரி திமுகவினர் ரகளையில் ஈடுபட்டனர். இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இந்த செயலுக்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.

இந்நிலையில் திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்த செயலில் ஈடுபட இருவர் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மீண்டும் அம்மா உணவகத்தில் ஜெயலலிதாவின் படம் வைக்கப்பட்டு சரிசெய்யப்பட்டுள்ளது.

இதற்க்கு அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தார்.அதேபோல டிடிவி தினகரன்,டாக்டர் ராமதாஸ் ஆகியோரும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *