ஆ.ராசா 48 மணி நேரத்திற்கு பிரட்சாரம் செய்ய தடை விதித்தது தேர்தல் ஆணையம்! இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு!!

ஆ.ராசா 48 மணி நேரத்திற்கு பிரட்சாரம் செய்ய தடை விதித்தது தேர்தல் ஆணையம்! இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு!!

ஆ .ராசா பிரட்சாரத்தின் போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயை பற்றி அவதூறாக பேசியது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக பிரட்சாரத்தின் போதே கண் கலங்கினார் எடப்பாடி பழனிசாமி இதனால் தான் மன்னிப்பு கேட்டு கொள்வதாக ஆ.ராசா தெரிவித்திருந்தார். மேலும் தான் பேசிய 40 நிமிட வீடியோவை பார்த்தல் உங்களுக்கு புரியும் என விளக்கம் அளித்திருந்தார்.

ஆ.ராசா நீலகிரி திமுக வேட்பாளர்: புகுந்த வீட்டில் மீண்டும் தன் செல்வாக்கை  நிரூபிப்பாரா? | raja nilgiri dmk candidate biodata - Tamil Oneindia

இந்த சம்பவம் தொடர்பாக ஆ .ராசா மீது வழக்கு தொடரப்பட்டது. இதை தொடர்ந்து தேர்தல் ஆணையம் ராசாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது.இது குறித்து விளக்கம் அளிக்கவும் உத்தரவிடப்பட்டது. தான் தவராக பேசவில்லை எனவும் தான் பேசிய 40 நிமிட காணொளியை பார்த்தல் உண்மை தெரியும் எனவும் விளக்கம் அளித்திருந்தார்.

ஆ.ராசா அளித்த விளக்கம் திருப்திகரமாக இல்லை, இதனால் அடுத்த 48 மணி நேரத்திற்கு தேர்தல் பிரட்சாரம் செய்ய ஆ.ராசாவிற்க்கு தடை விதிப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த தடையை எதிர்த்து ஆ.ராசா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அவசர வழக்காக இதை விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். ஆனால் நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *