யூரோ கோப்பை கால்பந்து போட்டி மைதானத்தில் வலிமை அப்டேட் கேட்ட அஜித் ரசிகர்!

யூரோ கோப்பை கால்பந்து போட்டி மைதானத்தில் வலிமை அப்டேட் கேட்ட அஜித் ரசிகர்!

நடிகர் அஜித்தின் வலிமை படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் எதிர்பார்ப்பு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் இந்த படத்திற்கு முதல் பார்வை கூட வெளிவராத நிலையில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. book my show செயலியில் அதிக அளவில் ரசிகர்கள் வாக்களித்த படங்களில் வலிமை திரைப்படம் முதல் இடத்தில உள்ளது.

மேலும் வலிமை படத்தின் அப்டேட்டை இங்கிலாந்து வீரர் மெயின் அலி, மற்றும் எடப்பாடி பழனிசாமியின் பிரட்சாரத்தின் போதும் வலிமை அப்டேட் கேட்டனர். இந்நிலையில் இங்கிலாந்தில் நடைபெற்று வரும் யூரோ கோப்பை கால்பந்து போட்டியின் போது அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் என்ற பதாகையுடன் இருப்பது போன்ற படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது .

ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் விரைவில் வலிமை படத்தின் அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *