சூயஸ் கால்வாயில் தடைபட்டிருந்த எவர்க்ரீன் கப்பல் மீட்கப்பட்டு இயல்பு நிலைக்கு கொண்டுவரப்பட்டது!!

சூயஸ் கால்வாயில் தடைபட்டிருந்த எவர்க்ரீன் கப்பல் மீட்கப்பட்டு இயல்பு நிலைக்கு கொண்டுவரப்பட்டது!!

கடந்த 6 நாட்களாக சூயஸ் கால்வாயில் தடைபட்டிருந்த எவெர்க்ரீன் கப்பல் மீட்கப்பட்டு மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டுவரப்பட்டது. சூயஸ் கால்வாய் என்பது மத்திய தரைக்கடலையும் செங்கடலையும் இணைக்கும் செயற்கையாக உருவாக்கப்பட்ட நீர்வழி போக்குவரத்து, 193 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த நீர்வழி தடத்தில் நாள் ஒன்றுக்கு 47 சரக்கு கப்பல்கள் கடந்து வந்தது.

எவெர்க்ரீன் என்ற சரக்கு கப்பல் சூயஸ் கால்வாயில் சென்ற போது காற்றின் வேகம் காரணமாக தரை ஒதுக்கப்பட்டது. இதனால் மற்ற கப்பல்கள் இந்த வழியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதன்காரணமாக பல ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகங்கள் பாதிக்கப்பட்டன.

இதனை மீட்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்த கப்பலில் பயணம் செய்த பலர் இந்தியர்கள் என்றும் அவர்கள் அனைவரும் பத்திரமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. பலவேறு முயற்சிகளுக்குப் பிறகு எவெர்க்ரீன் கப்பல் வெற்றிகரமாக மீட்கப்பட்டு மீண்டும் மிதற்க்கும் நிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது .

Suez canal traffic jam builds as work to move megaship continues | Water  transport | The Guardian

இதனால் உலக நாடுகள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளன. 6 நாட்களாக தடைபெற்றிருந்த சரக்கு வர்த்தகம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப ஆரம்பித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *