இணைய சேவைக்காக தென்கிழக்கு ஆசியா மற்றும் அமெரிக்காவை கடலுக்கடியில் கேபிள் முலம் இணைக்கும் பேஸ்புக் கூகிளின் திட்டம்!

இணைய சேவைக்காக தென்கிழக்கு ஆசியா மற்றும் அமெரிக்காவை கடலுக்கடியில் கேபிள் முலம் இணைக்கும் பேஸ்புக் கூகிளின் திட்டம்!

இந்தோனேஷியா, சிங்கப்பூர் மற்றும் அமெரிக்காவை இணைக்க கடலுக்கடியில் இரண்டு கேபிள்களை பயன்படுத்த உள்ளதாக பேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவனங்கள் தெரிவித்துள்ளனர்.அந்நாட்டின் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உடன் இணைந்து இணைய வசதியை மேம்படுத்த இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

Echo மற்றும் Bifroast என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கேபிள்கள் இந்தோனேசியாவின் ஜாவா கடல் வழியாக பயணிக்கிறது. இதன் மூலம் 70 சதவீதம் வரை இந்த கேபிள்களின் திறன்களை அதிகரிக்க முடியும் என பேஸ்புக் நெட்ஒர்க் முதலீடுகளின் துணை தலைவர் கெவின் சால்வடோரி தெரிவித்துள்ளார்.

இந்த கேபிள்கள் மூலம் வட அமெரிக்காவை நேரடியாக அந்நாட்டின் முக்கிய பகுதிகளை இணைக்க முடியும். இந்தோனேசியாவின் மக்கள் தொகையில் 73 சதவீத மக்கள் இணைய சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இவர்கள் மொபைல் நெட்ஒர்க் மூலமாக மட்டுமே இணைய சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.

மீதமுள்ள மக்கள் இணைய சேவையை பயன்படுத்தாமல் உள்ளனர் என்று சர்வே கூறுகிறது. இந்த திட்டத்தை அந்நாட்டின் டெலிகாம் நிறுவனமான XL Axiata உடன் இணைந்து செயல்படுத்த உள்ளது. இந்த திட்டம் 2023 ஆம் ஆண்டுக்குள் முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக் நிறுவனம் கடந்த ஆண்டு 3000 கிலோமீட்டர் தூரம் கொண்ட கேபிள் சேவை மூலம் பொது இடங்களில் WIFI வசதியை செய்து தரவுள்ளதாக அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *