பின்லாந்து நாடு உலகின் மிக சந்தோஷமான மக்கள் வாழும் நாடு! எப்படி அங்கு அனைவரும் சந்தோசமாக உள்ளனர்?

பின்லாந்து நாடு உலகின் மிக சந்தோஷமான மக்கள் வாழும் நாடு! எப்படி அங்கு அனைவரும் சந்தோசமாக உள்ளனர்?

உலகில் 195 நாடுகள் உள்ளன இதில் நீங்கள் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் சந்தோசமாக உள்ளீர்களா என்பதுதான் கேள்வி, ஒரு நாட்டில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ பணம் மட்டுமே முக்கியமா? பணம் இருந்தால் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பார்களா என்ற கேள்வி எழுகிறது.

பல்வேறு ஆய்வுகளின் படி உலகில் உள்ள மகிழ்ச்சியாக மக்கள் வாழும் நாடுகளில் முதல் இடம் பிடித்துள்ள நாடு பின்லாந்து. பின்லாந்து மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வதற்கான காரணங்களை இங்கே காணலாம். பின்லாந்து மக்கள் தங்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்த மாட்டார்களாம் அதாவது அதிகமாக அழமாட்டார்களாம்.

பின்லாந்து நாட்டில் உள்ள குழந்தைகளுக்கு இலவச கல்வி கிடைக்கிறது அதுவும் அதிக அழுத்தம் இல்லாமல் குழந்தைகள் பள்ளிக்கு செல்கிறார்கள். இங்குள்ள அணைத்து மக்களுக்கும் இலவச மருத்துவம் கிடைக்கிறது. பின்லாந்து northern corner ல் உள்ளது இதனால் இங்கு 6 மாதம் இரவாகவும் 6 மாதம் பகலாகவும் இருக்கும். மழை, பனி என காலநிலைகள் மாறிக்கொண்டே இருக்கும் இருப்பினும் மக்கள் காலையில் ஜாக்கிங் செய்வதை நிறுத்தமாட்டார்கள்.

பின்லாந்து மற்ற நாடுகளை போலவே மிகவும் அழகான மற்றும் தனித்துவமான இயற்கை வளங்களை கொண்டுள்ளது. இங்குள்ள மக்கள் இயற்கையை மிகவும் நேசிப்பவர்கள் இயற்கையோடு ஒன்றி வாழக்கூடியவர்கள் இதனால் தான் இவர்களால் சந்தோஷமான வாழ்க்கையை வாழ முடிகிறது.

மேற்கத்தைய நாடுகளை ஒப்பிடும் போது இங்கே இருக்கக்கூடிய மக்களின் வேலைப்பளு மிகக்குறைவு இதுவும் இவர்கள் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு முக்கிய காரணம். இங்குள்ள மக்கள் மற்றவர்களுடன் ஒன்றிணைந்து வாழ விரும்புகிறார்கள் யாரையும் போட்டியாக பார்க்க மாட்டார்கள்.

இங்கு குற்றங்கள் மிக குறைவு, பின்லாந்திலும் ஏழ்மையான மக்கள் இருக்கிறார்கள் ஆனால் இங்கு அனைவருக்கும் வீடு இருக்கிறது. நல்ல கல்வி கிடைக்கிறது வருங்காலத்தை பற்றிய பயம் இவர்களுக்கு இல்லை இதனால் தான் இங்குள்ள மக்கள் சந்தோசமாக உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *