ஆ.ராசா பேசியது கண்டனத்துக்குரியது, அவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் ஹெச்.ராஜா வலியுறுத்தல்!

ஆ.ராசா பேசியது  கண்டனத்துக்குரியது, அவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் ஹெச்.ராஜா வலியுறுத்தல்!

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயை பற்றி ஆ.ராசா பேசியது பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. தமிழகம் முழுவதும் பலர் இதற்க்கு கண்டனத்தை தெரிவித்தனர். பல்வேறு இடங்களில் போராட்டங்களும் நடத்தப்பட்டன.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாஜகவின் துணை தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது, இதில் கலந்து கொண்ட பாஜகவின் ஹெச்.ராஜா பேசியதாவது ஆ.ராசாவின் இந்த கருது ஒட்டுமொத்த தமிழ் பெண்களையும் இழிவுபடுத்தும் செயலாக இருந்தது, இது மிகவும் கண்டனத்துக்குரியது என்று அவர் தெரிவித்தார்.

மேலும் ஆ.ராசாவை கட்சியில் இருந்தே நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.இந்த சம்பவத்தை கண்டிக்கும் வகையில் பல்வேறு இடங்களில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். ஆ.ராசாவின் இந்த சர்ச்சை பேச்சால் அவர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *