ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : இந்தியா-நியூஸிலாந்து அணிகள் இன்று மோதல்

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : இந்தியா-நியூஸிலாந்து அணிகள் இன்று மோதல்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் 2019 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் பல நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு போட்டிகளில் விளையாடியது. இந்தியாவும் நியூஸிலாந்து அணியும் இறுதி போட்டிக்கு முன்னேறியது. இறுதி போட்டிகள் புகழ் பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது, கொரோனா பரவல் காரணமாக போட்டிகள் Southampton மைதானத்திற்கு மாற்றப்பட்டது.

இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு போட்டிகள் தொடங்க உள்ளது. இதற்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கேப்டன் விராட் க்ஹோலி, ரோஹித் சர்மா, கில், புஜாரா,ரஹானே, ரிஷபந்த், ஜடேஜா ,அஸ்வின்,ஷமி,பும்ரா,இஷாந்த் சர்மா உள்ளிட்ட வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

நியூஸிலாந்து அணி சம்பிப்பதில் இங்கிலாந்து உடன் விளையாடி உள்ளதால் அந்த அணிக்கு சாதகமான சூழ்நிலை உள்ளது. போட்டி நடைபெறும் Southampton மைதானத்தில் மழை வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக கருதப்படுகிறது. Southampton-ல் அதிகபட்ச வெப்பநிலை 19டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் என கூறப்படுகிறது. இது இந்திய அணிக்கு நெருக்கடியாக இருக்கும் என கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *