கோப்பையை வெல்லுமா இந்திய அணி? இந்தியா இங்கிலாந்து இடையேயான மூன்றாவது ஒரு நாள் போட்டி இன்று நடைபெறுகிறது.

கோப்பையை வெல்லுமா இந்திய அணி? இந்தியா இங்கிலாந்து இடையேயான மூன்றாவது ஒரு நாள் போட்டி இன்று நடைபெறுகிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி டெஸ்ட் ,டி 20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடந்து முடிந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அடுத்து நடந்த டி-20 தொடரையும் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் வென்றது.

தற்போது நடந்து வரும் ஒரு நாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற போட்டியில் பென்ஸ்டோக்ஸ் மற்றும் பார்ஸ்டோவின் அதிரடியால் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் இன்றைய போட்டி மிகுந்த சுவாரஸ்யமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இங்கிலாந்து அணி கடைசியாக நடந்த ஒரு நாள் உலகக்கோப்பையை வென்றுள்ளது, அந்த அணியில் பென்ஸ்டோக்ஸ் மிக முக்கியமான வீரராக உள்ளார். இந்தியாவை பொறுத்த வரையில் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடினாலும் பந்துவீச்சில் சொதப்பி வருகின்றனர்.

குறிப்பாக சுழற்பந்து வீச்சில் திணறி வருகின்றனர். குலதீப் யாதவ் மற்றும் குர்னால் பாண்டியா ஆகிய இருவரும் ரன்களை வாரி வழங்கி வருகின்றனர். இதனால் இந்தியாவால் விக்கெட் வீழ்த்த முடியாமல் போகிறது. இந்திய பௌலர்களில் புவனேஷ் குமார் மட்டும் குரைவான ரன்களை கொடுத்து வருகிறார் அவரை தவிர மற்றவர்கள் ரன்களை வாரி வழங்குகின்றனர்.

England tour of India, England tour of India 2020/21 score, Match  schedules, fixtures, points table, results, news

இந்தியாவின் நட்சத்திர பௌலர்களான பும்ரா, ஷமி ஆகியோர் இந்த தொடரில் இல்லாதது இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. இன்றைய போட்டியில் குலதீப் யதாவுக்கு பதிலாக சாஹல் விளையாட வாய்ப்பு உள்ளது. மேலும் தமிழக வீரர் நடராஜனுக்கும் வாய்ப்பு கொடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *