திரில் வெற்றி பெற்றது இந்திய அணி! ஆட்டத்தை மாற்றிய 44 வது ஓவர்..!!

திரில் வெற்றி பெற்றது இந்திய அணி! ஆட்டத்தை மாற்றிய 44 வது ஓவர்..!!

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது.துவக்க வீரர் ஆவிஷ் பெர்னாண்டோ சிறப்பாக விளையாடி 50 ரன்கள் எடுத்தார் மாற்றொரு துவக்க வீரரான bhanuka 36 ரான்கள் சேர்த்து அவுட் ஆகினார். துவக்க வீரர்கள் இருவரும் சிறப்பாக விளையாடி நல்ல துவக்கத்தை கொடுத்தனர்.

இருப்பினும் அடுத்து வந்த வீரர்கள் அடுத்தது விக்கெட்டை பறிகொடுத்தனர். சஹால் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்களை எடுத்தார், 50 ஓவர் முடிவில் இலங்கை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 275 ரன்கள் எடுத்து. புவி 3 விக்கெட்களும், தீபக் சாகர் 2 விக்கெட்களையும் எடுத்தனர்.

276 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் தவானும், பிரிதிவி ஷாவ்வும் களமிறங்கினர்.பிரிதிவி ஷாவ் தொடக்கத்தில் அதிரடியாக ஆடினாலும் 13 ரன்களில் அவுட் ஆகினார். இஷான் கிஷான் வந்த வேகத்தில் 1 ரன்னில் வெளியேறினார். தவான் 29 ரன்னில் வெளியேற சூர்யகுமாரும் மனிஷ் பாண்டேவும் நிதானமாக ஆடினார்கள். மனிஷ் பாண்டே எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆக பின் வந்த ஹர்டிக் பாண்டே வந்த வேகத்தில் ரன் எதுவும் எடுக்காமல் நடையை கட்ட இக்கட்டான நிலைக்கு சென்றது இந்திய அணி.

Image

இந்த சூழ்நிலையிலும் நிதானமாக விளையாடிய சூரியகுமார் யாதவ் அரைசதத்தை எடுத்து அவுட் ஆகினார். குர்னால் பாண்டியா தன்னுடைய பங்கிற்கு 35 ரன்களை எடுத்து அவுட் ஆகினார். பின் யாரும் எதிர்பாராத விதமாக புவிக்கு பதிலாக தீபக் சாகர் களம் இறங்கியது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இதற்க்கு பின்னால் ராகுல் ட்ராவிடின் நம்பிக்கை இருந்துள்ளது.

ஒரு கட்டத்தில் தீபக் சாகரும், புவனேஷ் குமாரும் நிதானமாக ஆடி கொண்டிருந்தனர். 44 வது ஓவரின் போது டிராவிட் ராகுல் சாகரிடம் பேசியுள்ளார் பின்பு மைதானத்திற்கு உள்ளே சென்ற ராகுல் சாகர், தீபக் சாகரிடம் தொடர்ந்து அவுட் ஆகாமல் அணைத்து பந்துகளையும் விளையாடும் படி கூறியுள்ளார். சிறப்பாக விளையாடிய தீபக் சாகர் தனது முதல் அரை சதத்தை பதிவு செய்தார். இறுதியில் 5 பந்துகள் மீதம் இருக்கும் போதே இந்திய அணி வெற்றி பெற்றது.

Image

இதையடுத்து சமூக வலைத்தளங்களில் இந்திய அணியை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக பயிற்சியாளராக ராகுல் ட்ராவிட்டை பாராட்டி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *