இந்தியா -இலங்கை கிரிக்கெட் தொடர், 20 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு!

இந்தியா -இலங்கை கிரிக்கெட் தொடர், 20 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு!

இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி-20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடரில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தொடரின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.

Certain changes in India vs Sri Lanka 2021 Series Schedule

இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணை கேப்டனாக புவனேஸ்வர் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த அணியில் பிரிதிவி ஷா, படிக்கல் , கெய்க்வாட்,மணீஷ் பாண்டே ,சூர்யகுமார் யாதவ், நிதிஸ் ராணா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

விக்கெட் கீப்பர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷான் அணியில் இடம் பெற்றுள்ளனர்.ஆல்ரவுண்டர்களாக ஹர்டிக் பாண்டியா மற்றும் குர்னால் பாண்டியா இடம் பெற்றுள்ளனர். சாகல்,, ராகுல் ஷாகல் , கிருஷ்ணப்ப கெளதம் ,குல்தீப் யாதவ்,வருண் சக்ரவர்த்தி,தீபக் சாகர்,நவதீப் சைனி, சேத்தன் சக்காரிய உள்ளிட்ட வீரர்களும் அணியில் இடம் பெற்றுள்ளனர்.இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி அடுத்த மாதம் 13 ஆம் தேதி கொழும்புவில் நடைபெற உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *