உள்ளூர் ஊரடங்கு குறித்து மாநில அரசுகள் முடிவெடுக்கலாம்- மத்திய அரசு அறிவிப்பு

உள்ளூர் ஊரடங்கு குறித்து மாநில அரசுகள் முடிவெடுக்கலாம்- மத்திய அரசு அறிவிப்பு

கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஆரம்பித்த கொரோனா பரவல் இந்த ஆண்டு வரை நீடித்து வருகிறது. கொரோனா பரவல் ஓரளவு கட்டுக்குள் வந்த நிலையில் மீண்டும் கொரோனாவின் தாக்கம் பல்வேறு நகரங்களில் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவது பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் கொரோனாவின் இரண்டாவது அலை ஆரம்பித்துள்ளது என்றும் இதனால் பொதுமக்கள் சுகாதார துரையின் அறிவிப்புகளை பின்பற்றி நடக்க வேண்டும் இல்லையென்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக சுகாதார துறை செயலாளர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தான் உள்ளூரில் ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்கலாம் என்று மாநில தலைமை செயலாளர்களுக்கு சுகாதார துறை கூடுதல் செயலாளர் அர்தி அகுஜா கடிதம் எழுதியுள்ளார் இதனால் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்க வாய்ப்பு உள்ளது

[vuukle]