இந்தியாவின் மிகச்சிறந்த டெஸ்ட் வெற்றிகளில் இதுவும் ஒன்று, லார்ட்ஸ் மைதானத்தில் 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

இந்தியாவின் மிகச்சிறந்த டெஸ்ட் வெற்றிகளில் இதுவும் ஒன்று, லார்ட்ஸ் மைதானத்தில் 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய 2-வது டெஸ்ட் போட்டி இங்கிலாந்தில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் பந்துவீச முடிவு செய்தார். முதல் இன்னிங்சில் இந்திய அணி 364 ரன்கள் எடுத்து அதிகபட்சமாக கே.எல் ராகுல் 129 ரன்களும், ரோஹித் சர்மா 83 ரன்கள் எடுத்து இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர்.

பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 391 ரன்கள் எடுத்தது, அதிகபட்சமாக கேப்டன் ஜோ ரூட் 180 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தார். இந்திய அணியில் அதிகபட்சமாக சிராஜ் 4 விக்கெட்களை கைப்பற்றினார். இரண்டாவது இன்னிங்க்ஸை விளையாட தொடங்கிய இந்திய அணியில் ராகுல், ரோஹித் சர்மா, விராட் ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் தந்தனர்.

பின்னர் வந்த புஜாரா, ரஹானே ஜோடி சிறப்பாக விளையாடினர். புஜாரா 206 பந்துகளை சந்தித்து 45 ரன்கள் எடுத்தார். ரஹானே 61 ரன்களில் வெளியேறினார். கடைசி நாளில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பண்ட் 22 ரன்களில் வெளியேற பின்னர் வந்த பும்ரா,ஷமி ஜோடி அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தது. இந்தியா 298 ரன்களுக்கு டிக்கலர் செய்தது.

Image

இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. இரண்டு தொடக்க வீரர்களும் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேற, ஜோ ரூட் மட்டும் நம்பிக்கை தரும் வகையில் விளையாடி வந்தார். இருப்பினும் இங்கிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்து வந்தனர்.

இறுதியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சிறப்பாக பந்து வீசிய சிராஜ் 4 விக்கெட்களை கைப்பற்றினார். கே. எல் ராகுல் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் 5 போட்டிகளை கொண்ட தொடரில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

Image

இந்த வெற்றியை இந்தியாவின் தலைசிறந்த வெற்றிகளில் ஒன்றாக இந்திய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். gabba டெஸ்ட் போட்டியுடன் ஒப்பிட்டு இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *