ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக நிறுத்திவைப்பு..!!

ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக நிறுத்திவைப்பு..!!

தற்போது இந்தியாவில் நிலவி வரும் கொரோனா அதிகரிப்பை கருத்தில் கொண்டு ஐபிஎல் போட்டிகள் கால வரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பி சிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா அறிவித்துள்ளார்.ஆடம் ஜம்பா போன்ற வீரர்கள் ஏற்கனவே சொந்த ஊர் திரும்பியுள்ளனர். கொரோனா பரவி வரும் சூழலில் ஐபிஎல் போட்டிகள் தேவையா என்ற கேள்வியும் நிலவி வந்தது.

இந்நிலையில் கொல்கத்தா அணியின் சுழற்பந்து வீச்சாளர் வருணசக்ரவர்திக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.அவரை தொடர்ந்து டெல்லி அணியின் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா மற்றும் ஹைட்ரபாத் அணி வீரர் சாஹா ஆகியோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பாலாஜி மற்றும் அணி நிர்வாகிகள் சிலருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தற்காலிகமாக போட்டிகளை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளது ஐபிஎல் அமைப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *