இனி யாரும் முகக்கவசம் அணிய தேவையில்லை இஸ்ரேல் அரசு அதிரடி அறிவிப்பு

இனி யாரும் முகக்கவசம் அணிய தேவையில்லை இஸ்ரேல் அரசு அதிரடி அறிவிப்பு

அமெரிக்கா , இந்தியா போன்ற நாடுகள் கொரோனாவை கட்டுப்படுத்த போராடிவரும் நிலையில் இஸ்ரேல் அரசு வீட்டை விட்டு வெளியே வரும்போது முகக்கவசம் அணிய தேவையில்லை என அதிரடியாக அறிவித்துள்ளது.அந்நாட்டில் கொரோனா கட்டுப்பாட்டில் உள்ளதால் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது இஸ்ரேல்.

இஸ்ரேல் எவ்வாறு கொரோனா வைரஸை கட்டுப்படுத்தியது என்ற கேள்வி எழலாம் , தடுப்பூசி செலுத்துவதன் மூலம் திறம்பட கையாண்டுள்ளது இஸ்ரேல் அரசு. 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் 2 தவணைகளாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 80 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தினமும் 200க்கும் குறைவான அளவே கொரோனா பாதிப்புகள் பதிவாகி வருகின்றன.இதனால் பள்ளிகள் வழக்கம் போல் செயல்பட தொடங்கியுள்ளது. கொரோனா கட்டுக்குள் இருப்பதால் தான் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்று அறிவித்துள்ளது அந்த அரசு. கொரோனா வைரஸை திறம்பட கையாண்டு இந்தியா அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு முன்மாதிரியாக திகழ்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *