ஸ்டாலின் மகள், மருமகன் வீட்டில் வருமானவரி சோதனை..! அத்துமீறுகிறதா மத்திய அரசு??

ஸ்டாலின் மகள், மருமகன் வீட்டில் வருமானவரி சோதனை..! அத்துமீறுகிறதா மத்திய அரசு??

சென்னை நீலாங்கரையில் உள்ள ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டில் வருமானவரி துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் அவருடைய கணவர் சபரீசனுக்கு சொந்தமான 4 இடங்களிலும் வருமான வரி சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களாக வருமான வரி துறையினர் தமிழகம் முழுவதும் சோதனை நடத்தி வருகின்றனர்.

தேர்தலில் பணப்பட்டுவாடா நடப்பதாக கூறி வருமான வரி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் இது பல சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. பாஜக தலைவர் எல் முருகன் போட்டியிடும் தொகுதியில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது .

கருத்து கணிப்பு முடிவுகள் அனைத்தும் திமுகவிற்கு சாதகமாக உள்ளதால் இந்த வருமான வரி சோதனைகள் நடத்தப்படுகின்றனவா என்ற கேள்வியும் எழுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version