ஒலிம்பிக் போட்டிகள் நடத்த ஜப்பான் நாட்டுமக்கள் எதிர்ப்பு?

ஒலிம்பிக் போட்டிகள் நடத்த ஜப்பான் நாட்டுமக்கள் எதிர்ப்பு?

சென்ற ஆண்டே நடைபெற வேண்டிய ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. ஜப்பானில் ஜூலை மாதம் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ளது. இதற்காக பல நாடுகளை சார்ந்த வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுவாக ஒலிம்பிக் போட்டிகள் பிரமாண்டமாக நடத்தப்படும், ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ள பல்வேறு நாடுகளை சார்ந்த வீரர்கள் கலந்துகொள்வார்கள்.

The Tokyo 2020 Olympics: What You Need to Know - The New York Times

ஜப்பானில் கொரோனாவின் நான்காவது அலை வீசத்தொடங்கியுள்ளது. இந்நிலையில் அந்நாட்டு செய்தி நிறுவனம் ஒன்று மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தியது அதில் ஒலிம்பிக் போட்டிகளை ரத்து செய்ய வேண்டும் என 39.2 சதவீதம் பேரும், ஒத்திவைக்க வேண்டும் என 32.8 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே ஒரு சில நாடுகள் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ள போவதில்லை என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *